வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம்
புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 10 பேர் வேலை செய்தாலே அவர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎப் நிதி கையாளப்படுகிறது. இதுவரை உள்ள வரம்புகளை நீக்கி, இன்னும் அதிகம் பேர் பயனடையும் வகையில் இதில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பிஎப் கமிஷனர் ராஜேஷ் பன்சால் கூறியுள்ளார். இது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் சில முக்கிய விஷயங்கள்:
* இப்போது குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே, அந்த நிறுவனம் அவர்களுக்கு பிஎப் பணம் பிடித்தம் செய்யலாம் என்ற விதி உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வந்து, 10 பேர் வேலை செய்தாலே பிஎப் பணம் பிடித்தம் செய்யலாம் என்று எண்ணுகிறது அரசு.
* மத்திய அரசின் பட்ஜெட் தொடர் வரும் 23ம் தேதி துவங்குகிறது. அதில், பிஎப் முதிர்வு மற்றும் வாபஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
* தொழிலாளர் பங்காக குறிப்பிட்ட சதவீதம், அவருக்கு நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்து தான் பிஎப் பணம் சேகரிக்கப்படுகிறது. இதிலும் மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
* குறிப்பிட்ட நிறுவனத்தின் வருமானம், லாபம் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பிஎப் பங்கு பணம் சதவீதம் குறைய வாய்ப்புண்டு.
* தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்களிடம் இருந்து மாதந்தோறும் 70 ஆயிரம் கோடி ரூபாய் பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
* ஏற்கனவே பிடித்தம் செய்து சேகரிக்கப்பட்ட பிஎப் தொகை கையிருப்பு 6.5 லட்சம் கோடி ரூபாய்.
* 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் பிஎப் திட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசு விதி உள்ளது. இப்போது 6.500 ரூபாய் சம்பளம் வாங்குவோரும் சேரலாம் என்பது கூடுதலாக 50 லட்சம் பேருக்கு பிஎப் திட்ட சலுகை கிடைக்க செய்யும்.
* வீட்டு வசதி செய்து தரும் புதிய திட்டத்தையும் பிஎப் மூலம் தர அரசு திட்டமிட்டு வருகிறது.
* பிஎப் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் 27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்று உள்ளது. இவர்களை கண்டுபிடித்து பணத்தை ஒப்படைக்கவும் வழி செய்யப்படும். இப்படி பல யோசனைகளுடன் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக