செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

குடும்ப பிரச்சினை வழக்கு

குடும்ப பிரச்சினை வழக்குகளை பொறுத்த வரை (சேர்ந்து வாழ கோருதல் விவாகரத்து திருமணம் தொடர்பான வழக்குகள்) ஒருவர் வழக்கு மனு தாக்கல் (மனுதாரர்) செய்கின்றார் 

அந்த வழக்கின் எதிர்தரப்பினருக்கு (எதிர் மனுதாரர்) நீதிமன்றம் சம்மன் அனுப்பும் 

அவர் (எதிர் மனுதாரர்) ஆஜராகி தன்னுடைய பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

இடையில் இருதரப்பினரையும் ((மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்) சமரசம் செய்ய நடவடிக்கை நீதிமன்றம் செய்யும் பிறகு

வழக்கு தாக்கல் செய்தவர் (மனுதாரர்) தரப்பில் விசாரனை துவங்கும்

மனுதாரர் மற்றும் அவரது ஆதரவு சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரனை செய்யப்படுவார்கள் எதிர் மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரனை செய்யப்படுவார்கள்

பிறகு எதிர் மனுதாரர் மற்றும் அவரது ஆதரவு சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரனை செய்யப்படுவார்கள் அவர்களை மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரனை செய்யப்படுவார்கள்

இரு தரப்பு சாட்சிகள் விசாரனை முடிந்த பின்னர் இரு தரப்பிரனரும் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பார்கள்

கடைசியாக நீதிபதி தீர்ப்பு சொல்லுவார் எப்போது என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது

மாநகர பகுதியில் குடும்ப நல நீதி மன்றத்திலும் மற்ற பகுதியில் சார்பு நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யலாம் திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, நெல்லை, தர்மபுரி, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, திருவள்ளூர், நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் குடும்ப நல நிதி மன்றம் அமைக்க பட உள்ளது

குடும்ப நீதிமன்றங்களின் வரலாறு:-

அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் திருமண உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க 1910 வாக்கில் Domestic Relations Court அமைக்கப்பட்டது. இந்தியாவிலும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கான தேவை பல்வேறு திருமண சட்டங்கள் இயற்றப்பட்டதற்குப் பிறகு தெரிய ஆரம்பித்தது. முதன்முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இனக் காவலரும், சமூக சேவகியுமாகிய துர்காபாய் தேஷ்முக், 1963ல் சீனாவுக்கு பயணம் சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த குடும்ப நல நீதிமன்றங்களின் செயல்பாடுகளைக் கண்டு வியந்தார்.
இந்தியா திரும்பியவுடன் நீதியரசர்கள், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருடன் விவாதித்து, குடும்ப நல நீதிமன்றம் அமைப்பதற்காக அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு கோரிக்கை வைத்தார். இவரின் குரலே குடும்ப நல நீதிமன்றங்கள் அமைவதற்கு அஸ்திவாரமாக அமைந்தது. அன்றைய தினம் அவருடைய கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், செயல் வடிவம் பெற எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 1974ல் சட்டக்குழு தன்னுடைய 59வது அறிக்கையில் குடும்பநல வழக்குகள் மற்ற சிவில் வழக்குகளைப்போல அல்லாமல் வேறு முறையில் கையாளப்பட வேண்டியது அவசியம் என்றும், அதற்கான தனி நீதிமன்றங்கள் தேவை என்றும் வலியுறுத்தியது. மேலும் 1975ல் பெண்களின் நிலை குறித்து பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்ட குழு இவ்விஷயத்தை மேலும் வலியுறுத்தியது. இதற்குப் பின்னர் நாடு முழுவதும் பெண்கள் அமைப்பைச் சார்ந்தவர்களும், சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்றுபட்டு முயற்சித்ததால், 1984 செப்டம்பர் 14 அன்று குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகையிருக்கும் நகரத்திலேயோ, நகராட்சியிலேயோ குடும்ப நல நீதிமன்றங்கள் அமைக்க வலியுறுத்துகிறது. இன்று 200க்கும் அதிக குடும்பநல நீதிமன்றங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகின்றன.

திருமணச் சட்டங்கள்

இந்து திருமண சட்டம்

இச்சட்டம் இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் தடை செய்யப்பட்ட நெருக்கமான உறவு முறைக்குள் இருக்ககூடாது. அவர்கள் சார்ந்த சமூகத்தின் பழக்கவழக்கப்படி சடங்குகளை செய்து மணம் முடித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ‘சப்தபதி’ அதாவது ஓமகுண்டத்தை சுற்றி ஏழாவது அடியை முடிக்கும் போது திருமணம் முடிவடைந்ததாக கருதப்படுகிறது.

கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872
இந்திய கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு பொருந்தும். இச்சட்டத்தின் படி, திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஓருவரேனும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். தேவாலயத்தில் அல்லது வெளியிடங்களில் கிறிஸ்தவ மதச்சடங்குகளை அனுசரித்து ஆலயப் பாதிரியார்கள் இவர்களுக்கு திருணம் செய்து வைக்கலாம். மாநில அரசால் நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ திருமண பதிவு அதிகாரிகள் முன்பு, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் எழுத்து மூலம் அறிக்கை கொடுக்க வேண்டும். இருசாட்சிகள் முன்னிலையில் நிகழும் திருமணத்தில், மணமக்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். கிறிஸ்தவ திருமணங்கள் எங்கு நடந்தாலும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின் சான்று மணமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

முஸ்லிம் திருமணங்கள்
முஸ்லிம் திருமணங்கள் ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. திருமணத்தை ‘நிக்கா’ என்றும், திருமண ஒப்பந்தத்தை ‘நிக்காநாமா’ என்றும் படிவத்தில் பதிவு செய்கிறார்கள். இத்திருமணத்தின் போது ஒரு தரப்பினர் திருமணத்தை முன்மொழிய வேண்டும். இன்னொரு தரப்பினர் இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இதற்கு ‘மொஹர்’ என்று பெயர். இந்த மொஹர் தொகை திருமணப்பதிவேட்டிலும், நிக்காநாமாவிலும் எழுதி வைக்கப்படும்.

சிறப்பு திருமணசட்டம்
மதத்தின் அடிப்படையில் இல்லாமல் எந்தமதத்தை, சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் சிறப்பு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமணப் பதிவாளரிடம் பெயர், வயது, முகவரி ஆகிய விபரங்களுடன் திருமண அறிவிப்பை கொடுக்க வேண்டும். அப்படி அறிவிப்பு கொடுப்பவர் 30நாட்களுக்கு முன், அந்த பதிவாளர் அலுவலகம் இருக்கும் பகுதியில் குடியிருந்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பை பொதுமக்கள் பார்க்ககூடிய இடத்தில் பதிவாளர், பார்வைக்கு வைப்பார்.இத்திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். 30தினங்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றால் பதிவாளர் திருமணத்தை பதிவு செய்யலாம். மணமக்களும், 3சாட்சிகளும் திருமணப்பதிவேட்டில் கையொப்பம் இட்டவுடன் திருமணம் பூர்த்தியாகிவிடும்.

சுயமரியாதை திருமணம்
மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும். சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம் 7ஏல் திருத்தம், 1967ல் கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம். மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தனக்கு தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.

நீதிமன்ற வாசல் கதை தட்டிய கனவன் அல்லது மனைவியை கேஸ் முடிந்த பிறகு நீதிமன்ற அனுபவத்தை கேட்டால் அவர்கள் சொல்லு ஒரே பதில் "தயவு செய்து குடும்ப பிரச்சினைக்கு கோர்ட்டுக்கு மட்டும் போய்விடாதீங்க "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக