செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சட்ட கல்லூரியில் சேருவது எப்படி

சட்ட கல்லூரியில் சேருவது எப்படி

சட்ட கல்லூரி சட்டக் கல்விக்கு முன் எப்போதையும் விட அண்மைக் காலத்தில் மவுசு கூடி உள்ளது... காரணம் படித்து முடித்த உடன் நீதிமன்றப் பணியை தொடங்கி விடலாம் . ஆனால் இதை விட தற்போது நிறைய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கிறது. கை நிறைய சம்பளம் உண்டு. குறிப்பாக

"National Law School" என்று அழைக்கப்படும் தேசிய சட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெறுபவர்களை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பெரிய சம்பளத்துடன் வசதியான மேல்தட்டு வாழ்கையும் வரவேற்கிறது. நிறுவன வேலை வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பட்டையை கிளப்புகிறார்கள். விரைவில் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு வழக்கிற்காக ஒரு முறை நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினால் இவ்வளவு ரூபாய் என்று பில் செய்கிறார்கள். (Charge for per Appearance in a case).

நுனி நாக்கு ஆங்கிலம், நடை, உடை, பாணியில் ஒரு துணிச்சல் கலந்த துள்ளல், மனதில் கொள்ளை கொள்ளையாக நம்பிக்கை, சட்டப் புலமை ஆகிய இவை எல்லாவற்றையும் இந்த "National Law School" (சட்ட பள்ளிகள்) போதிக்கின்றன. அதாவது நமது நாட்டில் இவை மட்டும்தான் சட்டத்தை உள்ளபடியே கற்று கொடுக்கும் கல்லூரிகளாக செயல் படுகின்றன. வேறு சட்ட கல்லூரிகள் சரியாக நடப்பதே இல்லை. குறிப்பாக பெங்களூரில் சந்துக்கு ஒரு சட்ட கல்லூரி வீதம் நாற்பது தனியார் சட்ட கல்லூரிகள் உள்ளன. எதுவும் உருப்படி இல்லை. கல்லூரிக்கு போகமலே தேர்வு எழுத வசதி உண்டு. சட்டமே தெரியாமல் பட்டமும் பெற்று விடலாம். சரி விடுங்க ... அது எதுக்கு நமக்கு...?

நம்ம நாட்டில் 12 தேசிய சட்ட பள்ளிகள் உள்ளன. அவை வருமாறு:-

NLSIU - Bangalore
NALSAR - Hyderabad
NLIU - Bhopal
WBNUJS - Kolkata
NLU - Jodhpur
HNLU - Raipur
GNLU - Gandhinagar
RMLNLU - Lucknow
RGNUL - Patiala
CNLU - Patna
NUALS - Kochi
NLUO - Cuttack
NUSRL - Ranchi
NLUJAA - Guwahati
DSNLU - Visakhapatnam
TNNLS திருச்சி

இதில் சேர "CLAT (Common Law Admission Test)" எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மேற்கண்ட பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மொத்தம் 1400 இடங்கள் மட்டுமே உள்ளன. +2 தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 2500/-. ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் செலவு ஆகும்.

ஆனலைனில் விண்ணப்பம் செய்ய

https://www.digialm.com/EForms/html/form1954/index.html

இதை விட்டால், பூனாவில் உள்ள Symbiosis law school-லில் சேரலாம். இதற்கும் நுழைவு தேர்வு [SET (Symbiosis Enterance Test)] உண்டு. விண்ணப்ப கட்டணம் ரூ. 1500/. இதற்க்கு இடையில் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (National Law University) சட்டப் பள்ளியில் சேர்த்து படிக்கலாம். இதற்கும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவு தேர்வுகளின் கேள்விகள் logical reasoning, legal reasoning, arithmetical reasoning, english, General Knowledge ஆகிய தலைப்புகளில் உள்ளது. கிட்ட தட்ட IAS தேர்வு போல் உள்ளது. நான்கு பதில்கள் கொடுக்கப்படிருந்தாலும், சட்டென்று பதில் டிக் செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சென்னையில் நிறைய கோச்சிங் சென்டர் உண்டு. அதில் Sri Raman Law Academy கொஞ்சம் நல்ல பண்றாங்க.

ஆகா இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அந்த மாணவன் அல்லது மாணவிக்கு எங்கும் ஒரு பெருமை கூடவே ஒட்டிக்கொண்டு வரும். காரணம் முன் சொன்ன மாதிரி அவன் அல்லது அவளை அப்படி ஒரு ஒளி வட்டத்துடன் அங்கு தயார் செய்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி நம்ம தமிழ் நாட்டிலே இல்லையா என்று நீங்கள் ஆதங்கப்படுவது எனக்கு நல்ல புரியுது... இருக்கு. அது Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai நடத்துகின்ற "School of Excellence in Law" . இதுவும் தேசிய சட்ட பள்ளிகளுக்கு சவால் விடுகிற மாதிரி சட்டம் கற்று தருகிறார்கள். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் உடனே வந்திருக்கும்.

"School of Excellence in Law" என்ற சீர்மிகு சட்ட பள்ளி Tamil Nadu Dr. Ambedkar Law University வளாகத்திலேயே உள்ளது. இங்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 80 மட்டும்தான். இந்திய மாணவர்கள் 70 பேர். NRI மாணவர்களுக்கு 10 இடம். அவ்வளவுதான்! இங்கேயும் படித்து முடித்தவுடன் வேலைக்கு வழி செய்து தரும் Placement cell உண்டு. எங்கே சேர நுழைவு தேர்வு இல்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் cut off தயாரிக்கப்பட்டு மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப் படுவார்கள். ஆண்டு கட்டணம் ரூ.60000/- வரும். முடிவில் B.A., B.L., (Hons.) பட்டம் கொடுப்பார்கள்.

தமிழக அரசு சட்ட கல்லூரிகளில் சேரலாம்.
Chennai,
Madurai,
Trichy,
Tirunelveli,
Coimbatore,
Vellore,
Chengalpattu
ஆகிய இந்த இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன.
முழு விபரம் அறிய http://www.tndalu.ac.in/admission.html

5 YEAR B.A., B.L. [HONS.] DEGREE COURSE
5 YEAR B.COM., B.L. [HONS.] DEGREE COURSE
3 YEAR B.L. [HONS.] DEGREE COURSE

புதுவையில் புதுவை அரசின் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி உள்ளது. இது புதுவை பல்கலை கழகத்துடன் சேர்ந்தது. Balaji Law School என்று ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உண்டு.

எனவே சட்டம் படிக்க நினைப்பவர்கள் அல்லது அப்படி படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்கள் முதலில் மேற்சொன்ன 11 சட்ட பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்யலாம். கூடவே Symbiosis Law School மற்றும் National Law University, Delhi -யும் முயற்சிக்க வேண்டும்.
இதுக்கு எல்லாத்துக்கும் கொஞ்ச நாள் வித்தியாசத்தில் நுழைவு தேர்வு நடக்கும்.

http://www.tndalu.ac.in/home.html
 — மாணவர் சேர்க்கை இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக