பெண்களுக்கான உதவி எண் 181
.. ஒரு பார்வை
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்விக் குறி நாட்டை ஆளும் அரசுகளுக்கு எதிராக வைக்கப்பட்டது.
எனினும் இதுவரை பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பது தினந்தோறும் வெளியாகும் பலாத்கார சம்பவங்களின் வாயிலாக மக்கள் உணர்ந்தே உள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதில் ஒன்றுதான் தில்லியில் பெண்களுக்கான உதவி எண் அமைப்பு. இதனை அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் திறந்து வைத்தார்.
உதவித் தேவைப்படும், பாதிக்கப்படும் பெண்கள் 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என்ற விளம்பரத்தோடு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
எது ஒன்றுமே துவங்கும் போது ஊடகங்களில் செய்தி வெளியாகும். பிறகு அது எப்படி நடக்கிறது, நடக்கிறதா இல்லையா, தேவை என்ன என்பது போன்றவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.
அதுபோல இந்த அமைப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி செயல்பட்டு வந்தது என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது அது குறித்து சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தில்லி தலைமைச் செயலகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஒரு சிறிய அறையில் இந்த உதவு எண் செயல்பட்டு வருகிறது.
அதில் 3 தொலைபேசி இணைப்புகள் மட்டுமே உள்ளன. மொத்தம் 17 பெண்கள் மட்டுமே 3 ஷிப்டுகளில் பணியாற்றுகிறார்கள். பணியிடமும், ஆட்களும் மிகவும் பற்றாக்குறையான நிலையில் இந்த உதவி எண் செயல்பட்டு வருகிறது என்பது இதுவரை புரிந்திருக்கும்.
இந்த ஆட்கள் பற்றாக்குறையால், உதவி அமைப்புக்கு வரும் 30 சதவீத தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியாத நிலை உள்ளது. இங்கு குறைந்தது 6 தொலைபேசி அழைப்புகளாவது இருக்க வேண்டும். இதுபற்றி இப்போதைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏன் எனில், இங்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. வரும் அழைப்புகளை ஏற்கவே இங்கு ஆட்கள் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளில் இந்த உதவி எண்ணுக்கு சுமார் 12 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் சுமார் 8.5 லட்சம் அழைப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் அழைப்புகள் ஏற்கப்படாமலேயே போய்விட்டன.
பலாத்காரத்தில் இருந்தும், குடும்ப வன்முறையில் இருந்தும், பெண்கள் விற்கப்படுவதில் இருந்தும் ஏராளமானோரை இந்த அமைப்பின் மூலம் காப்பாற்றியுள்ளார்கள். ஆனால், மனிதவள குறைபாடு காரணமாக இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படாமல் உதவித் தேவைப்படும் பெண்களை உதவி அடையாமலேயே தடுக்கப்பட்டுவிடுகிறது.
மத்திய, மாநில அரசுகள் என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதன் மூலம் நூறு சதவீத பலாத்கார சம்பவங்களை தடுத்து விட முடியாது.
பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகளை மட்டுமே குறைக் கூறிக் கொண்டிருக்காமல், தனி மனித ஒழுக்கம் உள்ளிட்டவற்றையும் நாம் பேணி காக்க வேண்டும் என்றுதான் இங்கே சொல்ல வேண்டி உள்ளது.
http://blog.dinamani.com/?p=7817