ஞாயிறு, 1 மார்ச், 2015

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள்
இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆள்வரைக்குள் வரும் சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
கொலை வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முதலில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு தான் முதல் நிலை விசாரனை ( எப்.ஐ.ஆர் பெறுதல் ஜாமின் நடவடிக்கைகள் கைது செய்யப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புதல் குற்றபத்திரிகை பெறுதல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நகல் கொடுத்தல் மேல் விசாரனைக்கு அனுப்புதல்) குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு நடைபெறும்
முதல் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூன்றாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று மூன்று வகையான குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் இருந்தன ஆனால் தற்சமயம் இவை அனைத்தும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று ஒரே பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சம அதிகாரம் உள்ளது

https://www.facebook.com/226441914189311/photos/a.415543888612445.1073741865.226441914189311/415423235291177/?type=1&theater

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக