ஞாயிறு, 1 மார்ச், 2015

குற்றவியல் நீதிமன்றங்கள்

குற்றவியல் நீதிமன்றங்கள்
1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court
3. அமர்வு நீதிமன்றம் Sessions Court
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள் இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற ஆள்வரைக்குள் வரும், சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சென்னை மாநகர பகுதியில் குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court) என்பது மாவட்ட அளவில் குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நிர்வாகம் செய்யும் நீதிமன்றம் ஆகும் கொலை முயற்சி போன்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது. 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்பது குரிபிட்ட வகையான வழக்குகளை விசாரனை செய்ய அமைக்கப்பட்டது ஆகும் எ.கா காசோலை வழக்குகள்
அமர்வு நீதிமன்றம் Sessions Court என்பது மாவட்ட அளவிலான நிதிமன்றம் கொலை வழக்கு உள்ளிட்ட மிகபெரிய குற்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது மரன தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டது.
கூடுதல் அமர்வு நீதிமன்றம் என்பது அமர்வு நீதிமன்றம் கொண்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்டது
உதவி அமர்வு நீதிமன்றம் என்பது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது வழக்கமாக சார்பு நீதிமன்றம் உதவி அமர்வு நீதிமன்றமாகவும் குற்ற வழக்குகளில் செயல் பதும்


https://www.facebook.com/226441914189311/photos/a.415543888612445.1073741865.226441914189311/415130505320450/?type=1&theater

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள்
இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆள்வரைக்குள் வரும் சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
கொலை வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முதலில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு தான் முதல் நிலை விசாரனை ( எப்.ஐ.ஆர் பெறுதல் ஜாமின் நடவடிக்கைகள் கைது செய்யப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புதல் குற்றபத்திரிகை பெறுதல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நகல் கொடுத்தல் மேல் விசாரனைக்கு அனுப்புதல்) குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு நடைபெறும்
முதல் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூன்றாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று மூன்று வகையான குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் இருந்தன ஆனால் தற்சமயம் இவை அனைத்தும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று ஒரே பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சம அதிகாரம் உள்ளது

https://www.facebook.com/226441914189311/photos/a.415543888612445.1073741865.226441914189311/415423235291177/?type=1&theater