ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வாரிசுச் சான்றிதழ்

வாரிசுச் சான்றிதழ்


https://www.facebook.com/notes/324675294365972/

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?
ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்
வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.
எங்கே விண்ணப்பிப்பது?
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்
எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.
ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.
விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?
விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.
எப்போது மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.
ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.



ஒருவர் இறந்து விட்ட பின்பு அவரின் பணம் மற்றும் சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும் வராமலிருப்பதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் தேவைப்படுவதால், இது இன்றியமையாத சான்றிதழாகக் கருதப்படுகிறது.

வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் சார்ந்துள்ள மதங்களுக்கான தனிச் சட்டங்களின்படி வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்து சமயத்தவர்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. வட்டாட்சியர் அளிக்கும் வாரிசுச் சான்றிதழில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலும் அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

விண்ணப்பப்படிவம்

இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது. இணையத்தில் கிழ்காணும் முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

விண்ணப்பிக்கும் முறை

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தினை நிரப்பி அதற்கான ஆவணங்களை இணைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாக அவர்களது விசாரணப் பரிந்துரைகளுடன் வட்டாச்சியரிடம் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். இதன் மேல் வட்டாட்சியர் தகுந்த விசாரணை அறிக்கைகள் பெறுவதுடன் அந்த விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிந்து வாரிசுச் சான்றிதழை வழங்குவார்
வாரிசுச் சான்றிதழும் சில பிரச்சனைகளும்

வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் இது தவறானதாகும். வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும்.

இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும் ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக் கொள்வோம். இங்கு இறந்து போனவர் தானாகத் தனது உழைப்பால் சம்பாதித்த தனது ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்யாமல் இறந்து விடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது.

அச்சொத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒருவர் திருமணமானவர் என்று வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான 'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் பட்டாவை வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத் தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பட்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின் முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும் 'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்து விடுவார்.



ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின் அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே இறந்து விட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது.

இந்தத் தேவையற்ற அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள், அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு, அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின் வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம்.

மேலும், ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக் காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால், காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும். இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.

ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில் வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள் இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம்.

அப்போது அந்த வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிர்வாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று வழங்குவார்.

http://www.muthukamalam.com/essay/how/p2.html


http://vidhai2virutcham.com/2012/02/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/




வாரிசுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவம் 
APPLICATION FORM FOR LEGALHEIRSHIP CERTIFICATE
http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-legalheir_0.pdf
1. விண்ணப்பதாரரின் பெயர்
Name of the Applicant: 
2. தகப்பனார் / கணவர் பெயர்
 Father/Husband’s Name: 
3. ஆண் / பெண்
 Sex (M/F) : 
4. இருப்பிட முகவரி
Residential Address : 
5. இறந்தவரின் பெயர்
 Name of the deceased : 
6. இறப்புச் சான்றிதழ் எண். 
 (மூலச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்) 
 Death Certificate No. : 
 (Original Certificate to be enclosed) 
 
7. இறந்தவரின் வாரிசுகள் விவரம்
 Legal Heirs of the deceased * 
 
• மனுதாரர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரெனில் இஸ்லாமிய சட்ட 
விதிகளின்படி வாரிசுதாரர்கள் விவரம் 
• If the applicant belongs to Islam Religion, the details of the 
legalheirs of the deceased as per Islamic Rules may be given. 
வரிசை 
எண். 
Sl.No. 
பெயர் 
Name 
வயது 
Age 
உறவு முறை 
Relationship 
திருமணமாவர் / 
திருமணமாகாதவர் 
Marital Status 
(1) (2) (3) (4) (5) 
 
 8. என்ன காரணத்திற்காக சான்றிதழ் 
தேவைப்படுகிறது? 
 (தேவையான ஆவணத்தின் ¡ 
 நகல்™சமர்ப்பிக்க வேண்டும்) 
Purpose for which the certificate is required. 
 (Necessary documents to be enclosed) 
 அ) இறந்தவர் ஒரு மணதாரரா? இரு மணதாரரா?
 (முதல் மனைவியின் குழந்தைகள் / 
 இரண்டாவது மனைவியின் குழந்தைகள் 
 விவரம் இணைக்கப்பட வேண்டும்) 
 
 Deceased had one wife/ two wives 
 (Details of children of first wife / 
 Second wife to be enclosed) 
ஆ) விவரங்கள் 
 Details 
9. குடும்ப அட்டை எண்.
Ration Card No. 
10. மனுதாரர்˜ இறந்தவருக்கு எந்த வகையில்™ உறவு?
 Relationship of the petitioner with the deceased. 
11. விண்ணப்ப நாள்
 Date of application : 
 
 விண்ணப்பதாரரின் கையொப்பம் 
 Signature of the Applicant 

https://www.facebook.com/notes/324675294365972/

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா???

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா???


ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.

பிரிவு 154 (2)  சி.ஆர்.பி. சி படி  விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்

இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி  மற்றும் 190  சி.ஆர்.பி. சி
 
மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

2.   குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

3.  பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.


ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. தற்போது, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லாவிட்டால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளருக்கு மனு அனுப்பி, அஞ்சல் ஒப்புதல் அட்டை பெற்று கொண்டு, அதன் பின்பும் நடவடிக்கை இல்லை என்றால், குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் பலன் இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று, குற்றவியல் சட்டத்தில் உள்ளதை, பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்னொரு கருத்தாக, உரிய காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர்நீதிமன்றத்தை அணுகினால், பத்து நாட்களுக்குள் மனுதாருக்கு, புகார் மீதான நடவடிக்கையை காவல் துறை தெரிவிக்க வேண்டும். ஒன்று, அவர் அளிக்கும் புகாரில், உண்மை இருந்தால், வழக்கு பதிய வேண்டும். அல்லது அவரது மனுவை close செய்து, அதை மனுதாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று, இன்னொரு தீர்ப்பும் உள்ளது. அதே போல, ஏழு வருடங்கள் சிறை தண்டனை, குற்றம் நிரூபிகபட்டால் என்று இருக்கும் குற்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தால், குற்றவாளியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று, காவல் அதிகாரி உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நீதிபதியும், உரிய காரணம் எழுதி, remand செய்ய வேண்டும் என்று, மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. நன்றி : மக்கள் சட்டம்


முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !


முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. "ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்".

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.



பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non - Bail able)ஆகும்.

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.

அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும்.
எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை :

 இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :

  குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.
https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-fir/788162451214363

தகவல் உரிமை சட்ட கட்டணங்கள் RTI Act Fees

தகவல் உரிமை சட்ட கட்டணங்கள்

தகவல் கட்டணங்கள்

தகவல் உரிமை சட்டம் 2005, நியாயமான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. மேலும், தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம்  தேவைப்பட்டால், எவ்வாறு அத்தொகைக் கணக்கிடப்பட்டு அக்கட்டணம் எட்டப்பட்டது  என்று சுட்டிக்காட்டி,   எழுத்துருவில் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப் படுதல் வேண்டும். Sec 7(3)

_ விண்ணப்பதாரர் பொதுத்தகவல் அலுவலரால் விதிக்கப்பட்ட கட்டண நிர்ணய முடிவின் மீது, உரிய மேல்முறையீட்டு துறையிடம் மறுஆய்வு செய்யுமாறு நாடலாம்.Sec 7(3) (b)

வறுமை கோட்டிற்குக்  கீடி வாழ்பவருக்கு, கட்டணம் விதிக்கப்படுதல் கூடாது. Sec 7 (5) 

_ பொதுத்தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்கத்  தவறினால், கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அத்தகவலை வழங்குதல் வேண்டும். Sec 7 (6)

_ இச்சட்டத்தின் 6(1) பிரிவின்படி (See அரசு ஆணை (நிலை) எண்.989, பொதுத் துறை, நாள் 07.10.2005) தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகத்தால் குறித்துரைக்கப்பட்ட கணக்குத் தலைப்பில், ரூபாய்  10/- (ரூபாய்  பத்து மட்டும்) ரொக்கமாகவோ, வரைவு காசோலையாகவோ, கருவூல சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ  நீதிமன்ற கட்ட ஸ்டாம்ப் மூலமாகவோ சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

இச்சட்டத்தின்7(1)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால் பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது வரைவு காசோலை, வங்கி காசோலை
வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே:-

1. A-4, A- 3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது படியெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் இரண்டு;

2. பெரிய அளவுத் தாளுக்கான படி ஒன்றின் உள்ளபடியான கட்டணம், செலவுத்தொகை;

3. மாதிரிகள் அல்லது மாதிரி படிவங்களுக்கான உள்ள செலவு அல்லது விலை;

4. பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணிநேரத்திற்கு, கட்டணம் எதுவும் இல்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது அதன் பின்னம் ரூபாய்  ஐந்து கட்டணம் ஆகும்.

இச்சட்டத்தின் 7(5)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால், பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கட்டவாறு கணக்குத்தலைப்பில்

9 சரியான ரொக்க ரசீது, வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம்  செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே,

1. மின்னணு வழியிலான டிஸ்கெட்/பிளாப்பி ஒன்றிற்கு ரூபாய்  ஐந்து கட்டணம்;

2. அச்சடித்த படிவத்தில் தகவல் வழங்குகைக்கு வெளியீட்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட  விலை.

(அரசு ஆணை (நிலை) எண்.989, பொதுத் துறை, நாள் 07.10.2005)
(அரசு ஆணை (நிலை) எண்.1012, பொதுத் துறை, நாள் 20.09.2006)

LETTER No.40755/2005-3  PUBLIC (ESTT.I & LEG.) DEPT. SECRETARIAT,  CHENNAI-9.  DATED: 21.10.2005.

From
Thiru G.Ramakrishnan, IAS,
Secretary to Government.
To
All Secretaries to Government.
All Heads of Departments
(including Commissions, Corporations and Universities etc.)
Sir,
Sub: Tamil Nadu Right to Information (Fees) Rules, 2005 – Head of
Account under which fee to be remitted – Instructions issued.
Ref: G.O.Ms.No.989, Public (Estt.I & Leg.) Dept., dated 7.10.2005.
******
I am directed to state that the Right to Information Act 2005 has come into  force on 12.10.2005. The Tamil Nadu Right to Information (Fees) Rules, 2005  have been published in Tamil Nadu Government Gazette Extraordinary dated  7.10.2005. I am to state that the fee amount to be collected under the Tamil Nadu  Right to Information (Fees) Rules, 2005 may be credited under the following new  sub head of account to be opened under Revenue Receipt account as detailed  below:- 
“0075.00. Miscellaneous General Services – 800. Other receipts –  BK. Collection of fees under Tamil Nadu Right to Information  (Fees) Rules 2005”
[DPC 0075 00 800 BK 0006].

2. I am also to state that the fee may be remitted by cash or Demand Draft  or Bankers cheque payable under the above head of account. The Public  Information Officer shall receive the cash or Demand Draft from the applicant and  arrange to remit the fee under the above head of account through the Treasury /  Pay and Accounts Office / State Bank of India / Reserve Bank of India as early as  possible. The applicant may also remit the fee under the above head of account  through Treasury / Pay and Accounts Office / State Bank of India / Reserve Bank  of India and produce the chalan to the Public Information Officer as an evidence  for having remitted the fee.  I am to request you to pursue action accordingly. 
Yours faithfully,
for Secretary to Government.

தமிழ் நாடு மா நில தகவல் ஆணைய்கத்தின் இனையதளத்தில் கட்டணம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு
2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்படி உரிய அரசாங்கமானது, அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன்மூலம் இச்சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளை இயற்றலாம். 07.10.2005 ஆம் நாளிட்ட பொது (பணியாளரமைப்பு 1 மற்றும் சட்டமியற்றுதல்) துறையின் 989 ஆம் நிலை எண் 
அரசாணையில், விண்ணப்பக் கட்டணம், ஆவண நகல்களுக்கான கட்டணம், கட்டணம் செலுத்தும் முறை ஆகியவற்றை நிர்ணயித்து, 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 20.09.2006 ஆம் நாளிட்ட பொது (பணியாளரமைப்பு 1 மற்றும் சட்டமியற்றுதல்) 
துறையின் 1012 ஆம் நிலை எண் அரசாணை மற்றும் 20.03.2007 ஆம் நாளிட்ட பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (நி.சீ.3) துறையின் 72 ஆம் நிலை எண் அரசாணையிலும், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளில் சில திருத்தங்கள் 17வெளியிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளின் சிறப்பியல்புகள் கீழ் வருமாறு:- (அ) இச்சட்டத்தின் 6ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் தகவல் பெறுவதற்கென 
ஒவ்வொரு விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 10/- ரொக்கமாகவோ அல்லது நீதிமன்ற கட்டண வில்லையாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ, அல்லது வங்கி காசோலையாகவோ இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

(ஆ) இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் தகவல் அளிப்பதற்கு, பின்வரும் வீதங்களில் உரிய ரசீதின் பேரில் ரொக்கமாக அல்லது கேட்பு வரைவோலை அல்லது வங்கி காசோலை வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படும். 

(i) உருவாக்கப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ2/- ( A-4 அல்லது A-3 அளவு தாள் ) 

(ii) பெரியளவிலான தாளின் நகலுக்கான உண்மையான கட்டணத்தொகை அல்லது செலவுத்தொகை,

(iii) மாதிரிகளுக்கு அல்லது மாடல்களுக்கு ஏற்பட்ட செலவு அல்லது அடக்கவிலை.

(iஎ) பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை. அதன் பின்னர் வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் (அல்லது அதன் ஒரு பகுதிக்கும்) கட்டணம் ரூ.5/- 

(இ) 7 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவின் கீழ் தகவல் வழங்குவதற்கு (அதாவது அச்சிடப்பட்ட அல்லது யாதொரு மின்னணு படிவத்தில்) உரிய ரசீதின் பேரில் ரொக்கமாக அல்லது கேட்பு வரைவோலை அல்லது வங்கி காசோலை வாயிலாக பின்வரும் வீதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்:-
(1) செருகு வட்டு அல்லது நெகிழ்வட்டில் தகவல் வழங்குவதற்கு செருகு வட்டு அல்லது நெகிழ்வட்டு ஒன்றுக்கு ரூ50/- மற்றும் 
(2) அச்சிடப்பட்ட வடிவில் தகவல் வழங்குவதற்கு வெளியீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அல்லது வெளியீட்டின் பகுதிநகலுக்கான ஒளிநகலின் பக்கம் ஒன்றுக்கு ரூ.2/-
(ஈ) 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை ( கட்டணங்கள்) விதிகளின் கீழ் வசூலிக்கப்படவேண்டிய கட்டணத்தொகையானது, பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்தப்படவேண்டும்.
0075-00- பல்வகை பொதுப்பணிகள் பல்வகை பொதுப்பணிகள் -800 ஏனைய வரவுகள் - க்ஷமு தமிழ்நாடு 2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளின் கீழ் கட்டணங்கள் வசூலித்தல் "" (த.தொ.கு0075 00 800 க்ஷமு 0006) 
(உ) 2005 ஆம்ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோருபவருக்கு செலுத்தப்பட்ட கட்டணத் தொகையை திரும்பக் கொடுப்பதற்கான கணக்குத்தலைப்பு பின்வருமாறு:- ""0075-00 - பல்வகை பொதுப்பணிகள் - 900 திருப்பி அளிக்கப்பட்ட 900 திருப்பி அளிக்கப்பட்ட தொகையை கழிக்கவும் - ஹநு. 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கட்டணத்தை திருப்பி அளித்தல்"" சட்டத்தின் கீழ் கட்டணத்தை திருப்பி அளித்தல்"" (த.தொ.கு0075 00 900 ஹநு 0005) 19
 
(ஊ) விண்ணப்பக்கட்டணம் உட்பட யாதொரு வரையறுக்கப்பட்ட கட்டணமும், வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டாது.
(எ) கிராம ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் ஒப்பளித்தவாறான வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள நபர்களின் வகைப்பாடு, கட்டணம் செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கும் செயல் நோக்கத்திற்காக, வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள நபர்களை கண்டறிவதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று தமிழக அரசு பொது (பணியாளரமைப்பு ஐமற்றும் சட்டமியற்றுதல்) துறையின் 14.11.2005ஆம் நாளிட்ட 1138-ஆம் நிலை எண் அரசாணையில் ஆணையிட்டுள்ளது. உரியவாறு சான்றளிக்கப்பட்ட பகுதிநகல் ஒன்று, இந்த சலுகையை பெறுவதற்கு போதுமானதாகும். 


https://www.facebook.com/notes/359470197553148/

மின்னணு முறையில் கிடைக்கக்கூடிய தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல் அரசாணை RTI Avt

மின்னணு முறையில் கிடைக்கக்கூடிய தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல் அரசாணை

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு 
சுருக்கம் 
பொதுப் பணிகள் - 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 22/2005) - அரசு வலைதளம் "“tn.gov.in”ல் மின்னணுமுறையில் பதிவுருக்களை பராமரித்தல் - 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் (மத்திய சட்டம் 22/2005) சட்டத்தின் கீழ் மின்னணு முறையில் கிடைக்கக்கூடிய தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல் – அறிவுரைகள் – வெளியிடப்படுகிறது. 
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (நி.சீ.ஐஐ)துறை 


அரசாணை நிலை எண். 16 நாள்: 11.02.2008 


 படிக்கவும்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் 08.01.2008 ஆம் நாளிட்ட 33425/பொது/2007 ஆம் எண் கடிதம் 
******* 
ஆணை:
மக்களாட்சி முறையின் செயல்பாட்டிற்கு முக்கியமாகவுள்ள குடிமக்கள் சார்ந்த மற்றும் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தகவல் அவசியமாக இருப்பதால், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பின் செயல்பாட்டில், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தன்மையையும், பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்தவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், 
அரசுகளையும், அவற்றின் நிறுவனங்களையும் ஆளப்படுபவர்களுக்கு, பதில் சொல்லும் பொறுப்புடையதாகச் செய்வதற்காகவும், பொது அதிகார அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தகவலைப் பெறுவதற்காக 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் (மத்திய சட்டம் 22/2005) சட்டம் குடிமக்களுக்கான தகவல் பெறும் நிருவாகமுறையை 
அமைப்பதற்கு வகைசெய்கிறது.  

2) தற்போது, மேற்சொன்ன சட்டத்தின் கீழ் அரசாணைகள், விளக்கக்குறிப்புகள், விதிகள் முதலியவற்றின் நகல்கள் கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெறுகின்றன. இவை, அரசின் வலைதளமான“tn.gov.in”ல் கிடைக்கின்றன.  

3) ஒட்டுமொத்தமாக மேற்சொன்ன சட்டத்தின் கீழ், மின்னணு முறைமூலமாக தகவலைக் கோருவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு மேற்சொன்ன சட்டத்தின் 2(த)(iஎ), 6(1) பிரிவுகளின்படியும், 7(3)(b), 7(5) மற்றும் 7(9) பிரிவுகளின்படியும் வகைசெய்யப்பட்டுள்ளது. 

 4) மேற்சொன்ன சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு, முனைப்பாக தகவல் அளிக்கும் பொருட்டு, மேற்சொன்ன சட்டத்தில் இருக்கக்கூடிய விதித்துறைகளின்படி , தகவல் அளிப்பதற்கு மின்னணு முறையைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

 5) அதற்கிணங்க, அரசு வலைதளம், """"வn.படிஎ.in""ல் கிடைக்கக்கூடிய அரசாணைகள், விளக்கக் குறிப்புகள், விதிகள் முதலியவற்றின் நகல்கள் தொடர்பாக மேற்சொன்ன சட்டத்தின் கீழ் தகவல் அளிப்பது குறித்து பின்வரும் அறிவுரைகளை அரசு 
வழங்குகிறது.  

6) மாநில பொதுத் தகவல் அலுவலர், அரசு வலைதளத்தில் விண்ணப்பதாரர் கோரிய தகவல் இருப்பதை உறுதி செய்தபின்னர், அரசு வலைதளமான""""வn.படிஎ.in""ல் குறிப்பிட்ட துறைக்கான பக்கத்தில் விண்ணப்பதாரர் கோரிய தகவல் உள்ளது என்பதை விண்ணப்பதாரருக்கு குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டலாம். ஆயினும், விண்ணப்பதாரர் தகவலை மின்னணு முறையில் இல்லாமல், தாள் வடிவில் வழங்க வேண்டுமென வலியுறுத்தினால், மேற்சொன்ன சட்டத்தின் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த (9) உட் பிரிவின்படி பொது அதிகார அமைப்பின் வள ஆதாரங்களை உரிய விகிதத்தில் அல்லாமல் திசை திருப்புவதாக இருக்கக்கூடும் அல்லது பதிவுருவினைப் பாதுகாப்பதற்கு அல்லது பேணிக் காப்பதற்குக் குந்தகம் விளைவிப்பதாக ருக்கக்கூடும் என்றாலன்றி விண்ணப்பதாரர் கோரியவடிவில் அவருக்கு, தகவல் வழங்கப்பட வேண்டும். 

 (ஆளுநர் அவர்களின் ஆணைப்படி) 
 ட்டி.எஸ். ஸ்ரீதர், 
 சிறப்பு ஆணையாளர் மற்றும் 
 அரசுச் செயலாளர் 
பெறுநர் 
அனைத்து அரசுச் செயலாளர்கள், சென்னை – 9. 
தலைமைச்செயலக அனைத்து துறைகள், 
மாவட்ட ஆட்சியர்கள்/மாவட்ட நீதிபதிகள்/தலைமை நீதித்துறை 
மாஜிஸ்ட்டிரேட்டுகள் உட்பட அனைத்து துறைத்தலைவர்கள் 
உயர்நீதிமன்றம், சென்னை -104 
பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தத்துறையின் அனைத்து பிரிவுகள், சென்னை-9 
செயலாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம், 378, அண்ணா சாலை, சென்னை-18. 
செயலாளர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சென்னை-2. 

நகல் பெறுவோர்: 
மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9 
அரசு தலைமைச்செயலாளரின் தனிச்செயலர், சென்னை-9, 
அரசு செயலாளரின் தனிச்செயலர், பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தத்துறை,  சென்னை-9 
அரசு செயலாளரின் தனிச்செயலர், சட்டத்துறை, சென்னை-9 
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/ 
 பிரிவு அலுவலர்

https://www.facebook.com/notes/359485144218320/

பிறப்பு- இறப்பு சான்றிதழ்

பிறப்பு- இறப்பு சான்றிதழ்

 பதிவு செய்ய கால கெடு
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  30 நாட்களுக்குள்  பதிவு செய்ய வேன்டும், 

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம் 

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை 

நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

பிறப்பு- இறப்பு பதிவாளர்

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நக்ராட்சி பகுதிக்கு ஆணையாளர்  (சுகாதர ஆய்வாளர்  - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)
மாநகராட்சி பகுதிக்கு ஆனையாள்ர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)

நீதிமன்றம்  மூலமாக் உத்திரவு பெற 

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய  பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்ந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில்  (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ)  பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் 

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ளhttp://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ளhttp://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி

 மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர்  -
 Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை மாநகராட்சி -
http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி மாநகராட்சி -

 https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி மாநகராட்சி
http://tirunelvelicorp.tn.gov.in/download.html


பிறபபு சாண்றிதழ் திருத்தம் செய்ய வழி

கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற்ந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய சிக்கலை உருவாக்குக்கு கின்றது.

கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சாண்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம்ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம்
பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள்.

குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்

உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம்.

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா?

இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.
மேலும் விபரங்களுக்கு

https://www.facebook.com/photo.php?fbid=292040800962755&set=pb.226441914189311.-2207520000.1402640867.&type=3&theater

https://www.facebook.com/notes/374822559351245/

தகவல் கோரும் மனு கால எல்லை RTI act

தகவல் கோரும் மனு கால எல்லை


தகவல் கோரும் மனு கால எல்லை 
தகவல் கோரி பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பபட்ட மனு மீது பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்

முதலாவது மேல் முறையிட்டு மனு
தகவல் கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள்  முதலாவது மேல் முறையிட்டு மனுவை பொது தகவல் மேல் முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் (30+30)

இரண்டாவது  மேல் முறையிட்டு மனு
தகவல் முதலாவது மேல் முறையிட்டு மனு  செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 90 நாட்களுக்குள்   இரண்டாவது  மேல் முறையிட்டு மனுவை தகவல் ஆணையகத்திற்கு  தலைமை தகவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்

தகவல் ஆனையகத்தில் அதன் மீது முடிவு எடுக்க காலவரையறை எதும் இல்லை 

கால கெடு முடிந்த பின்பு மனு செய்யப்பட்டால் கால கெடு முடிந்த காரணத்தால் அந்த மனுவிற்கு தகவல் மறுக்கப்படும்

மேல்முறையீடு (பிரிவு (19) 

 முதல் மேல்முறையீடு :

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது
பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால
அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு
மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செய்தால், விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார்.

இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு,
பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு
செய்யுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம்
தரப்பினர் மேல்முறையீடு செய்து கொளல் வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீடு : 
முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு. மேலும்  தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் 
செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும்.

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும்.

தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும். 

தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு U/S 8 RTI Act

தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு

தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு 
(சட்டப்பிரிவு 8) (சட்டப்பிரிவு 8) 

குடிமக்கள் எவருக்கும் கீழ்க்கண்ட தகவலை அளிக்கத் தேவையில்லை:- 
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, 
படைத்திறன், அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த நலன்கள், அயல் 
நாட்டுடன் கொண்டுள்ள உறவை பாதிக்கப்படும் அல்லது குற்றச் செயலினை 
துhண்டுதலாக அமையும் தகவல்கள்; 
நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்ட தகவல்கள் 
அல்லது அந்த தகவலை வெளிப்படுத்துவதால் நீதிமன்றத்தை அவமதிப்பதாக 
அமையக்கூடிய தகவல்கள்; 
நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையும் 
தகவல்கள்; 
எந்த ஒரு தகவலானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானது என்று 
அரசு கருதுகிறதோ அந்தத் தகவல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு 
தீங்காகும் தகவலான வணிக நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள், அறிவார்ந்த 
சொத்துடமை உ ள்ளிட்ட தகவல்கள்;  


பொது மக்களின் நலனுக்கு தேவையானது என்று அரசால் கருதப்படுகிற, தனி நபர் 
ஒருவருக்கு கிடைத்த நம்பகத்தன்மை உடைய தகவல்கள்; 
அயல் நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள்; 
நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் மற்றும் சட்டத்தினை 
செயல்படுத்துவதற்காகவும் கிடைத்த மூலம் மற்றும் உதவி ஆதாரங்களை 
இனங்காட்டக்கூடிய தகவல்கள்; 
தனி நபர் உயிர் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தகவல்கள்; 
வெளிப்படுத்தப்பட்டால், புலனாய்வு நடவடிக்கைக்கு அல்லது குற்றவாளிகளைக் 
கைது செய்வதற்கு தடையாயிருக்கும் அல்லது குற்ற வழக்கு தொடர்தலைத் தடை 
செய்திடும் தகவல்கள்; 
அமைச்சர்கள், குழு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் கலந்தாய்வுகள் 
குறித்த பதிவுருக்கள் உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள். எனினும் அமைச்சர் 
குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதற்கான காரணங்கள், எதன் அடிப்படையில் 
அம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை, முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பொது 
மக்களுக்கு தெரியப்படுத்தலாம்; 
ஒரு தகவலை வெளியிடுவதால் உள்ள நலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கான 
தீங்கை விட மிகுந்து இருக்குமிடத்து, 1923 ம் ஆண்டு அலுவலக சார் ரகசிய சட்டம் 
1923 (9/1923) ல் அல்லது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8 ன் படி 
அனுமதிக்கத்தக்க விலக்களிப்புகள் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு 
இருப்பினும் தகவலை அணுகி பெற அனுமதிக்கலாம்; 
ஒரு விண்ணப்பம் செய்யப்பட்ட தேதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 
சம்பவம், நிகழ்வு அல்லது நடந்த காரியம் தொடர்பான தகவல்கள், தகவல் சட்டம் 
2005 பிரிவு 8 உட்பிரிவு 1 (ய, உ யனே ஐ) ல் வகைகளுக்கு உட்பட்டு, கோரிக்கையினை  


செய்த நபருக்கு தகவல் அளிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வகை 
செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு முறைகளுக்கு உட்பட்டு, அந்த 20 ஆண்டு 
காலத்தினை கணக்கிடுவதில் பிரச்சனை எழும் பட்சத்தில், மத்திய அரசின் முடிவே 
இறுதியானதாகும்; 
தகவலை பெறுவதற்கான கோரிக்கையானது, அரசு அல்லாத தனி நபரிடமிருந்து 
வருகிற பதிப்புரிமையை மீறுவதாக இருக்குமிடத்து, இச்சட்டம் 8ம் பிரிவின் வகை 
முறைகளுக்கு பாதிப்பின்றி, அக்கோரிக்கையை நிராகரிக்கலாம். 

https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/765626513467957

மூன்றம் தரப்பினர் தகவல் பிரிவு 11 RTI Act U/S 11

மூன்றம் தரப்பினர் தகவல் பிரிவு 11


மூன்றம் தரப்பினர் தகவல் பிரிவு 11
மூன்றாம் தரப்பினரால் ரகசியம், தன்னுடைய தனிப்பட்ட விசயம் என்று கருதும் தகவலையும் பொது அதிகார அமைப்பிடம் உள்ள தகவலை பொது மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு பெறலாம்
பிரிவு 11 படி பொது தகவல் அலுவலர் வேண்டுகோள் கிடைத்த 5 நாட்களுக்குள் மூன்றாம் தரப்பினருக்கு ஷை தகவலை வெளிப்படுத்தலாமா வேண்டாமா என்ற கருத்தினை கேட்டு அறிவிப்பு அணுப்ப வேண்டும் அறிவிப்பு கிடைக்க பெற்ற 10 நாட்களுக்குள் அவர் கருத்து பதில் ஆட்சேபனையை  தெரிவிக்க வாய்ப்புள்ளது
பொது தகவல் அலுவலர் தகவல் கோரும் மனு கிடைத்த 40 நாட்களுக்குள் இறுதி முடிவு செய்ய வேண்டும் எழுத்து மூலமான முடிவினை மூன்றாம் தரப்பிற்கு வழங்க வேண்டும்
மூன்றாம் தரப்புக்கு முடிவு மீது மேல்முறையீடு செய்ய அவருக்கு அதிகாரம் உள்ளது 
சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட வர்த்தகம் அல்லது வணிக இரகசியம் தவிர மற்ற தகவல்கள் மூன்றாம் தரப்பின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தப்படாமெனினும் பொது நலனுக்காக தகவலை வழங்க வேண்டும்  என்று பிரிவு 11-ன் விதிவிலக்கு சொல்கின்றது  

எ.கா ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அவரின் பிறந்த தெதி படிப்பு சாதி பணியில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற  அரசு ஊழியரின் சொந்த விசயங்களை தகவல் அறியும் சட்டத்தில்  கோரலாம்
பொது தகவல் அலுவலர் சம்பந்தப்பட்ட  அரசு ஊழியரிம் தகவல் கோரப்பட்ட  விபரத்தை தெரிவித்து அவரின் கருத்தினை சொல்ல வாய்ப்பு அளித்த பின்பு தகவல் கோரும் மனு மீது முடிவு செய்ய வேண்டும் 
அதற்காக  அரசு ஊழியரின் ஆட்சேபனையை மட்டும் காரணம் காட்டி தகவல் மறுக்க இயலாது   

https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-11/693553777341898